தமிழ் மொழியில் இஸ்லாத்தை இணையத்தளம் மூலம் விளங்கி கொள்வதற்கு ஏதுவான முறையில் “இஸ்லாஹ்” Online Islamic College -www.islahme.com என்ற பெயரில் ஒரு இணையத்தளம் ஆரம்பிக்ககபடுள்ளது இது வரும் ரமழான் முதல் திகதியுடன் தனது முதல் இணைய வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளது. இந்த தளத்தில் உறுப்பினராவதற்கும் மற்றும் பயிற்சி நெறிகளில் பயன்பெறுவதட்கும் முதலில், உங்களது தகவல்களை பதிவுசெய்து கொள்ளவேண்டும் என்று கேற்கப்பட்டுள்ளது.

இணையத்தில் தமிழ் மொழி மூலமாக இஸ்லாத்தை கற்கின்ற வாய்ப்பை தமிழ் பேசும் சகோதர சகோதரிகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் Islah Team பெருமகிழ்ச்சி அடைகிறது. இத்தகையதொரு முயற்ச்சியைத் துவக்கி வைக்கின்ற பாக்கியத்தை நமக்கு நழ்கிய ஏக அல்லாஹவுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும். என்று அந்த இணையத்தளம் குறிபிடுகின்றது.
Islah – Online Islamic College , தனது முதல் பாட நெறியை இலங்கை இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியுடன் இணைந்தே நடாத்துகிறது. எமது முதல் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்கின்ற மாணவர்கள் இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியினால் உறுதிப் படுத்தப்பட்ட சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வர் என்று அதில் தெரிவிக்க பட்டுள்ளது இந்த இணையத்தளம் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பால் தொடங்கப்படுள்ளதாக அறிய முடிகின்றது.

0 comments: