புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!


நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.
ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
‘இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்’ (அல்பகரா 2:183).


ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ பிறை தென்படாத பொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும். ‘பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).Read More...


The Quran and Hadith on Ramadan


"O you who believe! Fasting is prescribed for you as it was prescribed for those before you, that you may become Al-Muttaqun (the pious).
(Fasting) for a fixed number of days, but if any of you is ill or on a journey, the same number (should be made up) from other days. And as for those who can fast with difficulty, (i.e. an old man, etc.), they have (a choice either to fast or) to feed a poor person (for every day). But whoever does good of his own accord, it is better for him. And that you fast, it is better for you if only you know." (2:183-84)
"The month of Ramadan in which was revealed the Quran, a guidance for mankind and clear proofs for the guidance and the criterion (between right and wrong). So whoever of you sights (the crescent on the first night of) the month (of Ramadan), he must fast that month, and whoever is ill or on a journey, the same number (of days which one did not fast must be made up) from other days.
Allah intends for you ease, and He does not want to make things difficult for you. (He wants that you) must complete the same number (of days), and that you must magnify Allah for having guided you so that you may be grateful to Him" (2: 185) Read more....


ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 1


ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 2


ஸ்பெயினில் இஸ்லாம் பகுதி 3


                                                                                                                                                         

                   Read more » » » » »

குர்ஆன் உண்மையானதா? பைபிள் உண்மையானதா? 

சந்தேகமின்றி தெரிந்து கொள்ள கட்டாயம் இந்த‌ 18 விடியோக்களையும் பாருங்கள். 

இந்த ஆரோக்கியமான கலந்துரையாடலை கேட்டால் உங்கள் சந்தேகம் அனைத்துக்கும் தீர்வு இதில் கிடைக்கும். 

சத்தியம் வென்றே தீரும். அசத்தியம் அழிந்தே தீரும். நிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும். 


Quran  or bible debate between dr. zakir naik and dr. william cambell christian and Muslims all should watch this debate.

கிறிஸ்துவர்களும் மூஸ்லீம்களும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.


இது 18 விடியோக்கள் அடங்கியது. பொறுமையாக அனைத்து விடியோக்களையும் பார்த்து சிந்தியுங்கள்.


முதலில் Dr. William Campbell பேசும் பொழுது சுவாரஸ்யம் அற்றது போல் தோன்றலாம். சாகிர் நாயக் அவர்களின் பதில் ஆரம்பிக்கும் பொழுது மெய் மறந்து விடுவீர்கள்.
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 1
QURAN OR BIBLE ZAKIR NAIK VS WILLIAM CAMBEL IN TAMIL 2


ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும், ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.
சிறப்புக்கள்
1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான், ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும், உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி
2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்
சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும், மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் - புகாரி, முஸ்லிம்
2-உபரியான தொழுகைகள், நோன்புகள், தர்மங்கள், உறவினர்களுக்கு உதவுவது, குர்ஆன் ஓதுவது, பாவமன்னிப்பு தேடுவது, நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
குறிப்பு- துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம் - புகாரி,முஸ்லிம்
3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும், அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்-முஸ்லிம்
குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது, ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.
அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள். ஆதாரம் புகாரி, முஸ்லிம்
4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும், பள்ளிவாசல், வீடு, கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது,
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ், அல்லாஹ{ அக்பர், அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : அஹ்மத்
இப்னு உமர் (ரலி), அபூஹ{ரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள், இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள். ஆதாரம் - புகாரி
பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸ{ப்ஹ{ தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.
5- ஹஜ் பெருநாள் தொழுகை, இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது.
நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள், மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும், நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள். ஆதாரம் :- புகாரி, முஸ்லிம்
6- உழ்ஹிpய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும், இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.
கொம்புள்ள, கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள், அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள். ஆதாரம் - புகாரி
உழ்ஹிய்யா கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்
ஆடு. மாடு, ஒட்டகம் (புகாரி)
ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும் (திர்மிதி)
மாட்டிலும், ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்கு கொள்ளலாம். (திர்மிதி)
உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது
கண் குறுடு, கடுமையான நோயானவை, மிகவும் மெலிந்தவை, நொண்டியானவை, அங்கங்கள் குறையுள்ளவை.
நேரம்
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்,
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது, அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் - புகாரி,முஸ்லிம்
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்)
அறுக்கும் முறை
ஆடு, மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும், (முஸ்லிம்)
ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)
அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹ{ அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறை
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ, தோல்களையோ, மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.
குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள், அவைகளின் மாமிசம், தோல், ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும், அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள், அறுப்பதற்குரிய கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்:- புகாரி,முஸ்லிம்
உழ்ஹிய்யா கொடுப்பவர் செய்யக் கூடாதவைகள்
துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். ஆதாரம்:- முஸ்லிம்
குறிப்பு:- இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான், அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.  
நன்றி:- tamilislam.com

பலஸ்தீன விடுதலைக்கு குரல் கொடுக்கும்  மேற்கு உலக பெண்களில் மிகவும் பிரபல்யமானவர்களின் ஒருவரான Lauren Booth இஸ்லாத்தை ஏற்றுகொண்டுள்ளதாக அறிவித்துள்ளார் இவர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமரான டோனி பிளயர் -Tony Blair-மனைவியின் சகோதரியாவார், இவர்  பலஸ்தீன் காஸா மீதான இஸ்ரேல்  ஆக்கிரமிப்பு முற்றுகைக்கு எதிராக  பலமாக குரல் கொடுத்து வருபவர் என்பது குறிபிடத்தக்கது  லண்டனில் நடைபெற்றுள்ள நிகழ்வொன்றில் கலந்து கொண்டு தான் ஒரு முஸ்லிம் என்று தெரிவித்துள்ளார் இவரின் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது -Lauren Booth பலஸ்தீன் பற்றிய வீடியோ


உண்ணுவதற்கும்,உடுப்பதற்கும், உறங்குவதற்கும், உழைப்பதற்கும் உரிமை உண்டாக்கி, உலகில் உள்ள உயிரினங்களுக்கெல்லாம் உயிர் ஊதிய உரிமையாளன் உயர்ந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
இயற்கை மார்க்கமான இனிய இஸ்லாத்தை இம்மையில் இன்றுவரைக்கும் இயங்கவைத்த இறுதி இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
முஃமினாகப் பிறந்த ஒவ்வொருவர்மீதும் அல்லாஹ்வுடைய மார்க்கமான இஸ்லாத்தைப் படிப்பது கட்டாயக் கடமையாகும். படித்ததுடன் மாத்திரம் நின்றுவிடாமல் படித்தவற்றை நமது வாழ்க்கையில் எடுத்து நடந்து பிறருக்கும் இஸ்லாம் மார்க்கத்தை எடுத்துச் சொல்லி நேரான பாதையில் மக்களை எடுக்கவேண்டியது நம்மீது கடமையாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி கிடைத்தாலும் சரி அதைப்பிறருக்கு எடுத்துச்சொல்லுங்கள்’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் நூல்: புகாரி-3461)
ஆனால் மார்க்கம் என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாததையும் கூறிவிடக்கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவனாவது உண்டாக்கினால் அது நிராகரிக்கப்படும்.’ (புகாரி:2697)
அல்லாஹ்வுடைய ஓரிறைக் கொள்கையை எடுத்துச் சொல்வதற்காக நமக்கு முன் வாழ்ந்து மரணித்த நபிமார்கள், ஸஹாபாக்கள், இமாம்கள், நல்லடியார்கள் ஆகியோர் அவர்களின் ஊடகங்களாக மனிதர்கள், பறவைகள், ஜின்கள், கடிதங்கள், பத்திரகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றை பயன்படுத்தி அவர்களுடைய காலத்திற்கேற்றவாறு ஒவ்வொருவரும் பலவிதமாக இஸ்லாத்தை எடுத்துச்சொன்னார்கள். அதுபோல் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களையும் பயன்படுத்தி இன்றைய காலத்தில் இஸ்லாத்தை எடுத்துச் சொல்கின்றோம். இன்று 21ம் நூற்றாண்டில் மிகப்பெரியதொரு ஊடகமாக இணையதளம் காணப்படுகின்றது.
இஸ்லாத்தை மக்களுக்கு எத்திவைப்பதற்காக இன்றைய காலத்தில் இணையதளத்தை மிகப்பெரிய ஒரு ஊடகமாக அதிகமானோர் பயன்படுத்துகின்றார்கள். மக்களிடத்தில் இணையதளம் குறுக்கு வழியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. எந்தளவுக்கென்றால் யூத, கிறிஸ்தவர்கள் இந்த ஊடகத்தைப் பயன்படுத்தி இஸ்லாம் என்ற பெயரில் பல இணையமுகவரிகளை உருவாக்கி இஸ்லாத்தில் இல்லாதவற்றை இருப்பதாகக்கூறி முஸ்லிம்களை திசை திருப்பிக்கொண்டிருக்கின்றார்கள். அதுபோன்று இளைஞர்களிடத்தில் இணையதளம் தவறான பாதையில் பயன்படுத்தப்படுகின்றது. இன்னும் இதுபோன்ற பலதவறான முறையில் மக்களிடத்தில் இணையதளம் பயன்படுத்தப்படுகின்றது கவலைக்குறிய செய்தியாகும். இணையதளம் என்றால் அது மக்களை வழிகெடுக்கின்ற ஒன்று, அதன்பக்கம் எவரும் செல்லக்கூடாது என்று மக்களிடத்தில் கீழ்த்தரமாகத்தான் பார்க்கப்படுகின்றது.
ஆனால் இணையதளம் ஊடாக மக்களின் இஸ்லாமிய அறிவை மிக இலேசாக வளர்த்துக்கொள்வதற்கும், அதிகமாக பணம் கொடுத்து வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கக்கூடிய கல்விகளை வீட்டிலிருந்துகொண்டே படிப்பதற்கும் பல வசதிகள் இருக்கின்றன. உண்மையிலேயே இணையதளத்தில் வழிகேடு 10 வீதமென்றால் நேரான வழி 90 வீதமாக இருக்கின்றது.
ஆகவே, மக்கள் வழிகேட்டிலிருந்து தவிர்ந்து நேரான வழியில் வாழவேண்டும் என்ற ஒரேயொரு நோக்கமே இந்த இணையதளம் ஆரம்பிப்பதற்கு காரணியாக அமைந்தது. நாம் எல்லோரும் இஸ்லாத்தைப் படித்துணர்ந்து அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களாக வாழ அல்லாஹ் உதிவுபுரிவானாக!
அல்லாஹ் அறிந்தவன்.
அன்புச் சகோதரன்
நிக்றாஸ் பின் சுல்தான்

இவ்வருட நோன்புப் பெருதாள் தொழுகை கல்முனை ஜமாஅத் அன்ஸாரிஸ்ஸ{ன்னதில் முஹம்மதிய்யாவினால் வழமை போன்று இம்முறையும் கல்முனை ஹ{தா பள்ளிவாயல் கடற்கரைத் திறந்த வெளியில் நடைபெற்றது. இப்பெருநாள் பிரசங்கத்தை மொளவி சபீர் நிகழ்த்தினார்.
இத்தெழுகையில் சுமார் 3000 இற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.




கடமையல்லாத - சுன்னத்தான நோன்புகள்.

மீண்டும் ஒரு ரமளான்: பிறை 28


ஷவ்வால் மாத நோன்பு.
யார் ரமளான் மாத நோன்பிற்கு பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

ஹஜ் மாதத்தில் அரஃபா நோன்பு (ஹாஜிகள் அல்லாதவருக்கு)

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் ''அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை.

அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

முஹர்ரம் மாத நோன்பு

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.

மாதத்தில் மூன்று நோன்புகள்.

மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

''நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூதர் (ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.

திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்பு 

நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர்.அறிப்பாளர் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.

ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் அபூஹீரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.

நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவார திங்கட்கிழமை, அடுத்து வரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள்.அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ.

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கலாமா?

நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா? என்று வினவினேன் அதற்கு ''ஆம்'' என்றார்கள். அறிவிப்பாளர், முஹம்மது பின் அப்பாத் (ரஹ்) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

''உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றி வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா.

சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது.

உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம், (சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத் தொலி அல்லது மரக்குச்சியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவதுமென்று விடட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர்ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) திர்மிதி, அபூதாவூத்

இரு பெருநாள்களில் நோன்பு இல்லை.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பதை தடை விதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள். அறிப்பாளர் அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்களும் உண்பதற்கும், பருகுவற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் நோன்பு ஏதும் இல்லை என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

காலமெல்லாம் தொடர் நோன்பு கூடாது

''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே? என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நான் (எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன் நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன் என்றோ கூறினார்கள்.அறிப்பாளர் அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

;;